லண்டனில் இரண்டு பயணிகளை ரயிலிலிருந்து தாக்கிய நபர்களைப் பற்றிய தகவலை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஆறாம் தேதி இரவு 10.30 மணி அளவில் மூன்று ஆண்கள் சென்ட்ரல் டுயூப் ரயிலுக்குள் ஏறி உள்ளனர். அங்கிருந்த இரண்டு பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி பைகளை தங்களிடம் தருமாறு பயமுறுத்தி உள்ளனர். இந்த இரு பயணிகளும் பைகளை தர மறுத்ததால் அவர்களை கத்தியால் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக பிரிட்டன் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் சிசிடிவி புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர் .
மேலும் அவர்களைப் பற்றி தகவல் எதுவும் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்குமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.