லண்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
லண்டனில் போலீஸ் அதிகாரி ஒருவரால் கடத்திக் கொல்லப்பட்ட சாரா எவெரெர்ட் வழக்கு தொடர்பு குறித்து போராட்டத்தை மக்கள் நடத்தி வருகின்றனர். மேலும் சாரா எவெரெர்ட் தொடர்பில் அஞ்சலி கூட்டத்தை காவல்துறை எதிர்கொண்ட விதத்தை சுட்டிக்காட்டியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் சுமார் 5 மணி அளவில் பாராளுமன்றத்திற்கு வெளிய மக்கள் திரண்டு போலீசாருக்கு எதிராக அவர்கள் கண்முன்னே நடத்தினர்.
இதனால் பொதுமக்களிடம் போலீசார்கள் பாராளுமன்ற வளாகம் அருகே இவ்வாறு கூட்டம் கூடுவது முறையல்ல என்று கூறி கோரிக்கையை வைத்தனர் . மேலும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்காக போலீசாருக்கு உளவிவகார செயலருக்கு அதிகாரம் வழங்கும் மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்றும் பொதுமக்கள் முழக்கமிட்டுள்ளனர்.