Categories
மாநில செய்திகள்

லண்டன், அமெரிக்கா செல்லும் முதல்வர் ஸ்டாலின்….. வெளியான முக்கிய தகவல்….!!!!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் முக ஸ்டாலின் லண்டன் மற்றும் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் முக ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் துபாய் சென்றார். துபாய் பயணத்தின்போது ஸ்டாலின் சுமார் 6000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு, ஒப்பந்தங்களை கையெழுத்திட்டார். மேலும் நோபல் ஸ்டீல் நிறுவனத்துடன் ஆயிரம் கோடியும் லுலு குழுமத்துடன் 3,500 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பிய ஸ்டாலின் ஆறு மிக முக்கிய தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இதன்மூலமாக 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகப் போகின்றது எனவும் கூறினார்.

இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் அடுத்த வெளிநாட்டு பயணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்ப்பதற்கு லண்டன் மற்றும் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் மாத இறுதியில் லண்டனுக்கு செல்ல உள்ளதாகவும், அதை தொடர்ந்து ஜூலை மாதத்தில் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் தற்போது லண்டன் சென்றுள்ளார். முதல்வரின் பயணத்திற்கு முன்னோட்டமாகவே அவர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணத்தின்போது முதல்வர் முக ஸ்டாலின் மனைவி, மருமகள், மருமகன், பேரக்குழந்தைகள் என தனது குடும்பத்துடன் பயணம் மேற்கொண்டதும் விமர்சனத்திற்குள்ளானது. எனவே இந்த பயணத்தில் அவர் எப்படி பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |