லண்டனில் நேற்று நடைபெற்ற நேஷனல் லீக் கால்பந்து போட்டியில் இங்கிலாந்து ஜெர்மனி அணிகள் மோதியுள்ளது. இதில் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். வெம்ப்லியில் போட்டி நடைபெறும் மைனாதனத்திற்கு அருகே அமைந்துள்ள ஒரு மதுபான விடுதியில் திடீரென புகுந்த சிலர் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த நிலையில் அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் இங்கிலாந்து கால்பந்து போட்டியை காண வந்திருந்த ரசிகர்கள். அப்போது முகமூடி அணிந்த சுமார் 100 ஆண்கள் வெம்ப்லியில் உள்ள மதுபான விடுதியில் புகுந்து வாடிக்கையாளர்களை தாக்கியுள்ளனர்.
மேலும் அவர்கள் இங்கிலாந்து கால்பந்து அணியின் தொப்பிகள் மற்றும் உடைகளை அணிந்திருக்கின்றனர். ஆனால் போலீஸ் விசாரணையில் அவர்கள் ஜெர்மன் ரசிகர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் ஜெர்மன் கால்பந்து ரசிகர்கள் லண்டன் பப்பில் வாடிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் பலர் காயமடைந்து இருக்கின்றனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் காயம் அடைந்தவர்கள் யாரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என போலீசார் கூறியுள்ளனர். இதற்கு இடையே கால்பந்து போட்டியில் இங்கிலாந்து ஜெர்மனி இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் இருந்ததால் இந்த போட்டி டிராவில் முடிந்துள்ளது.