Categories
சினிமா தமிழ் சினிமா

“லதாவின் இறுதி ஊர்வலம்”…. வெளியான வீடியோ…. வசமாக சிக்கிய “ஷாருக்கான்”….!!

பாலிவுட்டின் பிரபல ஹீரோவான ஷாருக்கான் மறைந்த பாடகி லதாவின் உடலுக்கு முன்பு துவா பிரார்த்தனை செய்த வீடியோவை ரசிகர்கள் தவறாக எண்ணியுள்ளார்கள்.

பாலிவுட்டின் பிரபல பாடகியான லதா மங்கேஷ்கர் தனது 92-ஆவது அகவையில் காலமாகியுள்ளார். அவருடைய உடல் அரசு மரியாதையுடன் மும்பை சிவாஜி பார்க்கில் தகனம் செய்யப்பட்டுள்ளது. இதில் பாலிவுட்டின் பிரபல நடிகரான ஷாருக்கான் கலந்துகொண்டு லதா மங்கேஷ்கரின் உடலுக்கு முன்பு பிரார்த்தனை செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் ஷாருக்கானை பெரும் சர்ச்சையில் சிக்க வைத்துள்ளார்கள். அதாவது இந்த வீடியோவில் ஷாருக்கான் லதா உடலின் மீது துப்பியுள்ளார் என்று கூறியுள்ளார்கள். ஆனால் சிலர் ஷாருக்கான் லதா உடலில் முன்பு துவா பிரார்த்தனை செய்துள்ளார் என்று அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே இஸ்லாமிய முறைப்படி குரான் வசனத்தை கூறி அதனை மற்றவர்களுக்கு சொல்வது வழக்கமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |