லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா தனது சமூக வலைத்தளத்தில் கவலையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றப்படுபவர் லதா மங்கேஷ்கர் இவர் புகழ்பெற்ற பாடகியும் மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். இவருக்கு 92 வயது ஆகிவிட்டது. இவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேலாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
Heartbroken, but blessed to have known her & for having worked with her.. loved this incredible voice & soul… Lataji holds a place in our hearts that is irreplaceable…. That's how profoundly she has impacted our lives with her voice. pic.twitter.com/HEAWKaUTZs
— Ilaiyaraaja (@ilaiyaraaja) February 6, 2022
இதையடுத்து நேற்று காலை 8.30 மணி அளவில் காலமானார். இவரின் இழப்பு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர் இந்திய மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் இவருக்கு இசைக்கலைஞர்கள் தலைவர்கள் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா தனது ஆழ்ந்த இரங்களை வீடியோ மூலம் இணைதளத்தில் பதிவிட்டுள்ளார்.