Categories
மாநில செய்திகள்

BREAKING : “லதா மங்கேஷ்கர் மறைவு”…. முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்….!!!!

இந்தியாவின் நைட்டிங்கேல் என புகழ்ப்பெற்ற பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் ( வயது 92 ) காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இவர் இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.

2001-ல் பாரத ரத்னா, திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவரது மறைவிற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லதா மங்கேஷ்கர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் காலமான செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். 80 ஆண்டுகளில் அவர் பல்வேறு மொழிகளில் தனது மெல்லிய குரலால் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் தொட்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

Categories

Tech |