லதா ரஜினிகாந்த்துக்கு எதிராக தனுஷ் முடிவெடுத்திருக்கிறாராம்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி அறிந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் அனைவரும் சேர்ந்து வாழும்படி கூறி வருகின்றனர். பிரிவுக்குப் பின் லதா ரஜினிகாந்த் அவருக்கு தெரிந்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் தனுஷுக்கு படவாய்ப்புகள் தரவேண்டாம் என கூறியதாக பேசப்பட்டு வருகின்றது.
இதனை தொடர்ந்து தற்போது தனுஷ் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. நாகார்ஜுனா படத்தை கிடப்பில் போட்டுள்ள தனுஷ், இயக்கலாம் என்ற யோசனையில் இருக்கிறாராம். லதா ரஜினிகாந்த்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனுஷ் இந்த முடிவை எடுத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.