Categories
சினிமா தமிழ் சினிமா

“லத்தி” படத்தின் சூட்டிங் நிறைவு…. இணையத்தில் வெளியான தகவல்…!!!

பிரபல நடிகர் விஷால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விஷால் அயோக்யா திரைப்படத்திற்கு பிறகு போலீஸ் கதாபாத்திரத்தில் லத்தி என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்த படத்தில் சுனைனா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ராணா புரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் லத்தி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தற்போது படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த தகவலை நடிகர் விஷால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து ஆகஸ்ட் 12-ஆம் தேதி லத்தி திரைப்படம் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், போஸ்ட் பிரடக்ஷன் பணிகள் நடைபெறுவதற்கு தாமதமாகும் என்பதால் ரிலீஸ் தேதிதையை படக்குழுவினர் மாற்றி வைத்துள்ளனர். அதன்படி செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்துள்ளனர். மேலும் லத்தி திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |