தமிழகம் முழுவதிலும் உள்ள லலிதா ஜுவல்லரிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே வருமான வரித்துறையினர் முக்கிய பிரபலங்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அதில் கணக்கில் வராத பல லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள லலிதா ஜுவல்லரி க்கு சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். வரி ஏய்ப்பு புகாரை அடுத்து சென்னை, மதுரை மற்றும் கோவை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.