ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின் மென்ட் தயாரிப்பில் கோமாளி பட புகழ் பிரதீப்ரங்கநாதன் இயக்கி நடிக்கும் “லவ் டுடே” திரைப்படத்தின் டிரைலரை நடிகர் சிலம்பரசன் இன்று வெளியிட்டார். கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் போன்றோர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம்தான் லவ் டுடே. கோமாளி புகழ் பிரதீப் ரங்கநாதன் இத்திரைப்படத்தை இயக்கி நடித்து இருக்கிறார். பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகி இருக்கும் “லவ் டுடே” படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக “நாச்சியார்” படத்தில் நடித்த இவானா நடித்துள்ளார்.
இவர்களுடன் சத்யராஜ், ராதிகா சரத் குமார், யோகிபாபு போன்றோர் முக்கியமான வேடங்களிலும் நடித்து உள்ளனர். யுவன் ஷங்கர்ராஜா இசையமைத்துள்ளார். முன்பே பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்போது டிரைலர் வெளியாகி இருக்கிறது. காதலர்கள் இடையே ஏற்படும் மோதல் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பொழுதுபோக்கு அம்சத்தில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் நவம்பர் 4ம் தேதியன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.