Categories
சினிமா தமிழ் சினிமா

“லவ் டுடே ” படம்…. முதல் நாளில் வசூலை அள்ளி குவித்து சாதனை…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

கோமாளி திரைப்படத்தை அடுத்து பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் லவ் டுடே. இவர் இயக்குனராக மட்டுமின்றி இந்த படத்தின் வாயிலாக ஹீரோவாகவும் வெள்ளித் திரையில் அறிமுகமாகி இருக்கிறார். இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகிபாபு உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கின்றனர்.

நேற்று வெளியாகிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூபாய்.4.5 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இதுவரை பல முன்னணி நட்சத்திரங்களால் கூட செய்ய முடியாத வசூலை லவ் டுடே படம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |