லஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்கான வேலைகளில் ஆர்பிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
லஷ்மி விலாஸ் வங்கி அபார வளர்ச்சி பெற்ற லாபத்தில் இயங்கி வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக சரிவை சந்தித்து கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அதில் நஷ்டம் அதிகரித்து வருவதால் திவால் நிலைக்கு தள்ளப்படும் நிலை உண்டாகி உள்ளது. வங்கி தனது செயற்பாடுகளை மீட்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இருந்தாலும் அதற்கு பலன் கிடைக்காததால் வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தற்போது இந்த வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.
அதனால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடுகளை விதித்தது. லஷ்மி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் இருந்து இன்று முதல் ஒரு மாதத்திற்கு 25 ஆயிரத்திற்கும் மேல் எடுக்க முடியாது என்று ஆர்பிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடு டிசம்பர் 16ஆம் தேதி வரையில் தொடரும் என்று அறிவித்தது. அதனால் வாடிக்கையாளர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவசர அவசரமாக ஏடிஎம் மையங்களுக்குச் சென்று பணத்தை எடுக்க தொடங்கினார்கள்.
இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதால் யாரும் பயப்பட வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதேசமயம் லஷ்மி விலாஸ் வங்கியை டிவிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதற்கான திட்டத்தை நேற்று அறிவித்துள்ளது. தற்போது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு காலம் முடிவடைவதற்கு முன்னர் இந்த இணைப்பு நடவடிக்கை முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளது.