Categories
மாநில செய்திகள்

லாக்கப் மரணம்…. காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவு….!!!!!!!!!

தமிழக காவல்துறைக்கு மிக உயரிய குடியரசு தலைவரின் சிறப்பு கொடி வழங்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, முதல்வர் ஸ்டாலின், டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜீவால் போன்றோர் கலந்து கொண்டனர். குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவை டிஜிபி கமிஷனர் போன்றோர்  பூங்கெடுத்து கொடுத்து வரவேற்றுள்ளனர். இதனை தொடர்ந்து தமிழக காவல்துறை சார்பில் சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது. அதன் பின் குடியரசு தலைவரின் சிறப்பு கொடியை வெங்கையா நாயுடு வழங்க மு க ஸ்டாலின் பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்த கொடி இதுவரை இந்தியாவில் 10 மாநிலங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் விழாவில் கலந்துகொண்ட வெங்கையா நாயுடுக்கு சதுரங்க அட்டையை மு.க ஸ்டாலின் பரிசாக அளித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் பேசிய போது, மத சாதி மோதல்கள் இல்லை. துப்பாக்கி சூடு இல்லை. கள்ள சாராய மரணம் இல்லை. காவல் நிலைய மரணங்கள் குறைந்து இருக்கின்றது குறைந்து இருக்கின்றது என்று தான் சொல்கின்றதே தவிர முற்றிலுமாக இல்லை என கூறவில்லை. காவல் நிலைய மரணங்கள் இல்லை என்ற நிலை ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும் பாலியல் போக்சோ  சட்டங்களில் சிக்குபவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இந்தியாவின் பல நகரங்களுக்கு முன்மாதிரியானது நமது காவல்துறை சட்டம் ஒழுங்கு மக்களை பாதுகாப்பதே காவல்துறையின் முழுமுதற் பணி ஆகும்.

மேலும் இந்தியாவிலேயே முதன் முறையாக மகளிர் காவலர்களை நியமித்தவர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதி இன்று காவல்துறையில் ஒரு டிஜிபி, 2 ஏடிஜிபி, 15 ஐஜி கள், 2000 காவலர்கள் என்று பெண்கள் களப் பணியாற்றி வருகின்றார்கள். பெண்களுக்கு காவல்துறையில் அதிகாரம் அளித்தவர் கருணாநிதி. குடியரசு தலைவரின் கொடியை வழங்கி சிறப்பித்துள்ள குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவை வரவேற்கின்றேன். தமிழ்நாட்டு காவல்துறை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய நாள் இது மிக உயரிய அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது. இரட்டை மகிழ்ச்சி அடைகின்றது. தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்கின்ற வரலாற்றுப் பெருமை இது. ஒட்டுமொத்தமாக அனைத்து காவலர்களுக்கும் கிடைத்திருக்கின்ற பெருமை 160 வருடங்களாக ஆற்றிய  பணிக்கான விருது இது. இரவு பகல் பாராது, உயிர் பாராது ஆற்றிய பணிக்கான கௌரவம் இது இந்த சிறப்பை பெற்று தந்தவர் கருணாநிதி என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |