Categories
உலக செய்திகள்

லாங் மார்ச்-2சி ராக்கெட் வாயிலாக விண்ணில் செலுத்தப்பட்ட 9 செயற்கைகோள்கள்…. பிரபல நாடு வெளியிட்ட தகவல்….!!!!

சீன நாடு நேற்று ஒரேநாளில் லாங்மார்ச்-2 சி ராக்கெட் வாயிலாக 9 செயற்கைக் கோள்களை விண்வெளியில் செலுத்திவிட்டது. அதாவது நண்பகல் 12 மணிக்கு சிச்சுவான் மாகாணத்தின் ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து செலுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள்கள், வணிக செயற்கைக்கோள்கள் ஆகும்.

இந்த செயற்கைக்கோள்கள் தங்களது சுற்றுப்பாதையில் இணைந்துள்ளது. இதற்கிடையில் ஜீலி தொழில்நுட்பக் குழுமத்தின் துணை நிறுவனமான ஜீஸ்பேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த செயற்கைக்கோள்கள், ஆராய்ச்சிகள் செய்வதற்கும் தொழில்நுட்பங்களை சரிபார்ப்பதற்கும் முக்கியமாக பயன்படுத்தப்படும். அத்துடன் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தரவு ஆதரவுகளையும் வழங்கும். லாங் மார்ச் ராக்கெட் தொடரின் 422வது பயணம் இது ஆகும்.

Categories

Tech |