விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கழுவன்திட்டை பகுதியில் இருக்கும் தனியார் லாட்ஜில் விபச்சாரம் நடப்பதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட லாட்ஜில் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ராஜஸ்தான், தூத்துக்குடி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 4 இளம்பெண்களும், ஜெயக்குமார், தேவபிரசாத், வினில் ஆகிய 3 பேரும் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அனைவரையும் பிடித்து களியக்காவிளை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தேவபிரசாத், ஜெயக்குமார், வினில் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்களையும் மீட்டு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.