லாட்ஜில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கிறது. இவர் கடந்த 10-ஆம் தேதி வேலை தேடி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இவர் மீனாட்சிபுரம் பகுதியில் இருக்கும் ஒரு லாட்ஜில் அறையெடுத்து தங்கியுள்ளார்.
இந்நிலையில் சண்முகம் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த லாட்ஜ் ஊழியர்கள் கோட்டார் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.