Categories
உலக செய்திகள்

லாட்டரி சீட்டில் அடுத்த லக்…. லைப் டைம் செட்டில்மெண்ட்…. 3,500 கோடி பரிசுத் தொகை…!!

அமெரிக்காவில் விற்கப்பட்ட ஒரு லாட்டரி சீட்டுக்கு 3,500 கோடி பரிசுத் தொகை கிடைத்துள்ளதாக கலிபோர்னியா லாட்டரி துறை அறிவித்துள்ளது.

தெற்கு கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் எனும் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ஒரு எரிவாயு நிரப்பும் நிலையத்தில் 3,500 பரிசு  தொகைக்கான  லாட்டரி சீட்டு விற்கப்பட்டுள்ளது. அந்த லாட்டரி சீட்டை வாங்கிய நபர் யார் என்பது இதுவரை தெரியவில்லை என்று  கலிபோர்னியா லாட்டரி துறை தெரிவித்துள்ளது. எனவே பரிசு விழுந்த சீட்டை வாங்கியவர் தொகையை பெற்றுக் கொள்ள அவருக்கு ஒரு வருட கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசுத் தொகையை சம்பந்தப்பட்ட அந்த நபர் மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம் என்றும், இல்லையெனில் 29 ஆண்டுகளுக்கு தவணை முறையில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் லாட்டரி துறை தெரிவித்துள்ளது. இதில் பரிசுத் தொகையில் ஒரு பகுதியான 40 விழுக்காடு, அதாவது 1400 கோடி ரூபாயை அந்த நபர் வரியாக செலுத்த வேண்டியிருக்கும் என்றும்  லாட்டரி துறை தெரிவித்துள்ளது …

Categories

Tech |