Categories
தேசிய செய்திகள்

“லாரிகள் நேருக்கு நேர் மோதியதில்” 11 பேர் பலி…. குஜராத்தில் கோர விபத்து…. மோடி இரங்கல்…!!

நெடுஞ்சாலை பகுதியில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 11 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் வதோதரா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் லாரியின் முன்பக்கம் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை ஆரம்பித்துள்ளனர்.மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி இச்சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதில், “இந்த பயங்கர விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. பலியானவர்களின்  குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன். இது தொடர்பாக அதிகாரிகள் தங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |