லாரி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
திருக்கோவிலூரில் இருந்து கார் ஒன்று விழுப்புரம் நோக்கி நேற்று அதிகாலை வேகமாக சென்றது. இந்த காரை அருமலை கிராமத்தில் வசிக்கும் இளையராஜா(39) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பெரும்பாக்கம் அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த லாரி காரை முந்தி சொல்ல முயன்றது.
இதனால் லாரிக்கு வழி விடுவதற்காக இளையராஜா காரை இடது புறமாக திருப்பிய போது நிலைதடுமாறிய வாகனம் சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் இளையராஜா அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.