Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

லாரியின் பின்பகுதியில் மோதிய கார்…. 2 குழந்தைகள் பலி…. கோவையில் கோர விபத்து…!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் பலியான நிலையில், 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாஸ்திரி நகரில் பெயிண்டரான ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராமச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான கேரளாவிற்கு காரில் சென்றுள்ளார். இந்த குடும்பத்தினர் அங்கிருக்கும் கோவில், தர்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் மீண்டும் ஈரோடு நோக்கி புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாலக்காடு-கோவை தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது க.க சாவடி அருகே டீசல் இல்லாமல் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கட்டுப்பாட்டை இழந்த ராமச்சந்திரனின் கார் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கிவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 9 பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது சிறுமி சஞ்சு, சிறுவன் மித்ரன் ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற 7 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |