தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி மாநகர் நல அலுவலர் இந்திரா தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
நேற்று அதிகாரிகள் பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் லாரியில் திண்டுக்கல்லுக்கு கொண்டுவரப்பட்ட 300 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.