திருச்சி மாவட்டம் முசிறி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்து வந்துகொண்டிருந்த சொகுசு காரில் பிரபாகரன், பிரபு, ராஜலிங்கம், சதீஷ்குமார், பழனிசாமி உட்பட 7 பேர் பயணித்துள்ளனர். திருச்சி, நாமக்கல் சாலையில் முசிறி அருகே உள்ள உமையாள்புரம் என்ற இடத்தில் சொகுசு கார் வந்தபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்த தகவலின் பெயரில் வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.