மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் கொத்தனார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருஞ்சுனை பகுதியில் கொத்தனாரான ராசு(45) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை ராசு மோட்டார் சைக்கிளில் அன்னவாசல் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மதியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றபோது ராசு முன்னால் வேகமாக சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார்.
அப்போது எதிரே வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் படுகாயமடைந்த ராசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராசுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.