இருசக்கர வாகனம் லாரி மீது மோதி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மேலவாணி பகுதியில் நவநீத கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் தர்ஷன் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தர்ஷன் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திற்கு சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனம் திடீரென தடுமாறி முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில் தர்ஷன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த கேணிக்கரை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரான கீழக்கரையை சேர்ந்த யுவராஜ் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.