இருசக்கர வாகனம் மீது லாரி மோதி எலக்ட்ரீசியன் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஓம்சக்தி நகரில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். எலக்ட்ரீசியரான இவர் மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வம் தனது இருசக்கர வாகனத்தில் பரதினகருக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே வந்த தண்ணீர் லாரி திடீரென செல்வத்தின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் செல்வம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையறிந்த கேணிக்கரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவரான குமரியேந்தல் பகுதியில் வசிக்கும் நாகநாதன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.