Categories
சேலம் மாவட்ட செய்திகள்

லாரி உரிமையாளர்கள்… வேலை நிறுத்தம் வாபஸ் …!!!

வரும் 15 ம் தேதி நடைபெற இருந்த லாரி உரிமையாளர் சங்கத்தில் வேலை நிறுத்த போராட்டமானது வாபஸ் பெறப்பட்டது .

சேலம் மாவட்டத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரின் வருடாந்திர மகாசபை கூட்டமானது நேற்று சங்கத் தலைவரான கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் லாரி உரிமையாளர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் மற்றும் மாநில லாரி உரிமையாளர் சம்மேளன பொருளாளர் ஆகிய பதவிகளில் உள்ள கனகராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கூறுகையில்:-

கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலையானது வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வால் பொதுமக்களும், லாரி தொழிலாளர்களும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. ஆனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலையானது குறைவாக காணப்பட்டாலும் ,மத்திய மற்றும் மாநில அரசுகளால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது மட்டுமல்லாது கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி பாஸ்ட் ட்ராக் முறையானது அமல்படுத்தப்பட்டது.

இதனால் லாரி ஓட்டுனர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சுங்க சாவடிகளில் ஒருபகுதியில் மட்டுமாவது கட்டண முறையை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதனை கண்டுக்காத அரசினை எதிர்த்து வருகின்ற 15ஆம் தேதி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முடிவு செய்தனர். தற்சமயம் ஐந்து மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளதால், இவர்களின் போராட்டம் மே 2ஆம் தேதிக்கு பிறகு செயல்படுத்தப் உள்ளதாக முடிவு செய்தனர்.

இந்த மகாசபை கூட்டத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்காக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவும், சுங்க சாவடிகளில் ஒரு பகுதியை கட்டணம் செலுத்தி செல்ல லாரிகளுக்கு அனுமதி அளிக்கவும், சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள வண்டிப்பேட்டை இடத்திலுள்ள பாழடைந்த கட்டிடத்தை இடித்து அங்கு புதியதாக லாரி நிலையம் கட்டுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Categories

Tech |