Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

லாரி ஓட்டுனருக்கு நடந்த கொடூரம்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

லாரி ஓட்டுநரை தாக்கி கைபேசியை பறித்த குற்றத்திற்காக  3  வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கும்மிடிபூண்டியில் இருந்து லாரி ஒன்று இரும்பு கம்பியை ஏற்றிக்கொண்டு மதகடிப்பட்டுக்கு  சென்றுள்ளது. அந்த லாரியை கார்த்தி என்பவர் ஓட்டியுள்ளார். இவர் மதகடிப்பட்டில் இரும்புகம்பிகளை இறக்கிவிட்டு கும்மிடிப்பூண்டிக்கு திரும்ப வந்துள்ளார். இந்நிலையில்  விழுப்புரம் அருகே உள்ள ஒரு சோதனைச் சாவடியின் அருகே லாரியை நிறுத்திவிட்டு கார்த்தி  போன் பேசியுள்ளார். அப்போது அவ்வழியே அந்த மோட்டார் சைக்கிள் லாரியின் அருகில் வந்து  நின்றது. அந்த மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய  3 வாலிபர்கள் லாரி ஓட்டுநர் கார்த்தியை தாக்கி அவருடைய கைபேசியை பறித்துள்ளனர்.

அதன்பிறகு அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து கார்த்தி வளவனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார்த்தியிடம் இருந்து செல்போனை பறித்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அந்த விசாரணையின் போது வெங்கடேசன். செல்வமணி. சதீஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து கார்த்தியிடம் செல்போன் பறித்தது தெரியவந்துள்ளது. அதன் பிறகு அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |