நாமக்கல் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருத்த லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள இண்டூரிலிருந்து வாகித் என்பவர் லாரியில் பாக்கு பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு புதுக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்தார். இவருடன் கிளீனர் தாகீர் வந்தார். இந்நிலையில் நாமக்கல் அருகேயுள்ள குப்பம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விட்டது.
இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த கிளீனர் தாகீரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்த விபத்தில் டிரைவர் வாகீத் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியுள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.