Categories
மாநில செய்திகள்

லாரி கவிழ்ந்து கோர விபத்து…. 1 மணி நேர போராட்டம்…. வாலிபரின் நிலைமை?…. பரபரப்பு சம்பவம்….!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் மதுபானம் ஏற்றி சென்ற சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியின் அடியில் வாலிபர் ஒருவர் சிக்கிக் கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரை சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்.

இதனையடுத்து வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் இந்த விபத்தில் லாரியில் இருந்த மது பாட்டில்கள் சாலையில் சிதறியது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |