Categories
தேசிய செய்திகள்

லாரி-கார் மோதி கோர விபத்து…. 4 பேர் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

பெங்களூருவில் நேற்று லாரி-கார் மோதி கொண்டு கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 4 பேரும் உயிரிழந்துள்ளனர். லாரி ஓட்டுனர் வேகமாக வந்ததால் கவனக்குறைவின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மேற்கு மண்டல காவல் துணை ஆணையர் குல்தீப் ஜெயின் கூறியது, பெங்களூரு பூர்வாங்கரா குடியிருப்பு அருகில் உள்ள நைஸ் சாலையில் வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |