Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

லாரி டியூப்களில் இதுவா இருக்கு?…. 4 வாலிபர்கள் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் சாராயம் தயாரித்து மலையடிவார கிராமத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்கு காவல்துறையினர் பல முயற்சி மேற்கொண்டனர். எனினும் சாராயத்தை முற்றிலும் ஒழிக்க முடியாமல் காவல்துறையினர் திணறுகிறார்கள். ஆகவே கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சப்படுவதும், அதை அங்கிருந்து கடத்தி கிராமங்களில் விற்பனை செய்வதும் வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் காவல்துறையினர் மலையடிவாரத்திலுள்ள தகரை கிராமத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது லாரி டியூப்புடன் 3 மோட்டார்சைக்கிளில் வந்த 4 பேரை மடக்கி பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் வெள்ளிமலை கொடமாத்தி கிராமத்தை சேர்ந்த அரிச்சந்திரன் மகன் ஹரி(22), சீனிவாசன் மகன் குமார்(25) கலியபெருமாள் மகன் சாமிநாதன் (25), வெள்ளிமலையை சேர்ந்த தேவேந்திரன் மகன் சரவணன் (30) என்பதும், இவர்கள் 7 லாரி டியூப்களில் தலா 50 லிட்டர் வீதம் 350 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. அதன்பின் 4 வாலிபர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன் 7 லாரி டியூப்கள், 350 லிட்டர் சாராயம், 3 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Categories

Tech |