லாரி டிரைவரை மிரட்டி பணம் மற்றும் செல்போன் பறித்த மேலும் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவர் கடந்த 11ஆம் தேதி அங்கன்வாடி மையங்களுக்கு சத்துமாவு லோடு ஏற்றிக்கொண்டு நாமக்கல்-சேலம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் பொம்மைகுட்டைமேடு பகுதியில் சாப்பிடுவதற்காக பிரகாஷ் லாரியை நிறுத்தியுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற 4 வாலிபர்கள் லாரிக்குள் ஏறி கத்தியை காட்டி பிரகாஷை மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து அவரிடமிருந்த 24,000 பணம் மற்றும் செல்போன் ஆகியவை பறித்துள்ளனர். இதனைதொடர்ந்து முதலைப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது அப்பகுதி பொதுமக்கள் லாரியை மடக்கி வாலிபர்களை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்த 2 வாலிபர்கள் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் மீதமிருந்த 2 வாலிபர்களை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் புதன்சந்தையை சேர்ந்த கார்த்திக் மற்றும் சூர்யாவை கைது செய்த நிலையில் மீதமுள்ள இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தில் அருள்குமார் மற்றும் ஸ்ரீதர் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்த பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.