சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள கடம்பூர் வடக்கு தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சீனிவாசன். இவர் லாரி டிரைவர் ஆவார். இவர் கடந்த 24ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் ஆத்தூருக்கு சென்றபோது பைத்தூர்புதூர் என்ற இடத்தில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், லாரி டிரைவர் சீனிவாசன் உறவினர்கள் ரவிக்குமார், மணிகண்டன் மற்றும் விஜய ஆகிய மூன்று பேரும் நிலத்தகராறில் அவரை கொன்றது தெரியவந்தது. இது குறித்து ஆத்தூர் ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்க தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் மணிகண்டன், விஜய் ஆகிய இருவரும் நேற்று ஆத்தூர் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு முனுசாமி முன்னிலையில் சரணடைந்தனர். அதன் பிறகு அவர்கள் இரண்டு பேரையும் 15 நாட்களுக்கு காவல் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து இருவரும் ஆத்தூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில் சரணடைந்த மணிகண்டன், விஜய் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஆத்தூர் ரூரல் போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த கொலை வழக்கு குறித்து சரணடைந்த இரண்டு பேரின் தந்தையான ரவி குமாரை போலீசார் தொடர்ந்து வலை வீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில் ஆத்தூர் அருகில் உள்ள கடம்பூருக்கு மோட்டார் சைக்கிளில் பைத்தூர் வழியாக நேற்று இரவு சென்று கொண்டிருந்த ரவிக்குமாரை இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.