Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க…. நடு ரோட்டில் லாரியை நிறுத்தி சென்ற டிரைவர்…. பறிமுதல் செய்த அதிகாரி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாகன சோதனையின் போது திருட்டுத் தனமாக வண்டல் மணல் கடத்தி வந்த லாரியை தாசில்தார் பறிமுதல் செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மலையூர் பகுதிகளில் இருக்கும் குளங்களில் அனுமதி இல்லாமல் வண்டல் மண் கடத்தப்படுவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுக்குறித்து தகவலறிந்த தாசில்தார் விஸ்வநாதன் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அய்யன்காட்டிலிருந்து வேகமாக வந்த லாரியை நிறுத்த சைகை காட்டியுள்ளார். இதனை பார்த்த லாரி டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்து  தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து அந்த லாரியை சோதனை செய்த போது அதில் குளத்திலிருந்த வண்டல் மணல் கடத்தி வந்தது தெரிய வந்ததுள்ளது. இதனை தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த தாசில்தார் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதுக்குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை  வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |