Categories
தேசிய செய்திகள்

லாரி மீது பேருந்து மோதி விபத்து…. இருவர் உயிரிழந்த சோகம்..!!

பீகாரில் 45 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் பேருந்து நடத்துநரும், ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பிகார் மாநிலம் கதிஹார் நகரில் உள்ள முசாபர்பூரிலிருந்து சிலிகுரிக்கு 45 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து டுமர் கிராமத்திற்கு அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலை-31 அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்தந்த நிலையில், காயமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து பேருந்தில் பயணம் செய்த ஒருவர் கூறுகையில், ஓட்டுநர் மிகவும் வேகமாக சென்றதாகவும், நடத்துநர் மெதுவாகச் செல்லுமாறு கூறியும் அவர் கேட்காமல் வேகமாகப் பேருந்தை இயக்கியதால் தான் இந்த விபத்து நிகழ்ந்தது எனவும் கூறினார்.

Categories

Tech |