லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குமணந்தாங்கல் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முனுசாமி தனது மோட்டார் சைக்கிளில் லாலாப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த லாரி முனுசாமியின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் முனுசாக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் முனுசாமியை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முனுசாமி பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பிறகு முனுசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதுகுறித்து சிப்காட் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.