Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய சுற்றுலா பேருந்து…. 50 ஐயப்ப பக்தர்கள் காயம்…. கோர விபத்து…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் பகுதியை சேர்ந்த 50 ஐயப்பன் பக்தர்கள் குருசாமி சுகுன்ராஜ் தலைமையில் ஒரு சுற்றுலா பேருந்தில் சபரிமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். நேற்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் தியேட்டர் அருகே சென்ற போது பேருந்து ஓட்டுனர் முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததால் பேருந்து லாரியின் பின்புறம் மோதியது. மேலும் வடபுறம் சர்வீஸ் சாலையை கடந்து டீக்கடை மற்றும் பேக்கரி கடையின் சுற்றுச்சுவரில் லாரி மோதி நின்றது.

இந்த விபத்தில் பேருந்து, லாரி ஓட்டுநர்கள் , ஐயப்ப பக்தர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த அகில பாரத ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த பக்தர்களை மீட்டு திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் பேருந்து, லாரி ஓட்டுனர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |