Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய பேருந்து…. இடிபாடுகளில் சிக்கி பலியான கண்டக்டர்…. கோர விபத்து…!!

லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கண்டக்டர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூரிலிருந்து 42 பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ராஜேந்திரன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இதில் சக்திவேல் என்பவர் கண்டக்டராக பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கங்காபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது செங்கல் பாரம் ஏற்றி சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றது. அப்போது லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததால் நிலைதடுமாறிய பேருந்து லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் பேருந்தில் இருந்த பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திவேலின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |