உத்திரபிரதேசத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 12 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பரபங்கி என்ற மாவட்டத்தில் உள்ள பாபுரி கிராமத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து ஒன்று நேற்று டெல்லியில் பக்ரியாச் என்ற இடத்தில் இருந்து 60 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. அப்போது பாபுரி என்ற கிராமத்தின் அருகே உள்ள நெடுஞ்சாலையில் வரும்பொழுது சாலையில் நின்றிருந்த மாடுகள் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் பேருந்தை திருப்பியுள்ளார். அப்போது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்த பயணிகள் பலரும் பலத்த காயமடைந்தனர். விபத்தில் 12 பயணிகள் பலியான நிலையில், 32 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.