லாரி மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கேரள மாநிலத்தில் இருந்து சொகுசு பேருந்து பணிகளுடன் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இது பேருந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள விளம்பாவூர் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனரான சுதீஷ் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 30-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.
ஆனால் பேருந்தின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.