Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய பேருந்து…. படுகாயமடைந்த 10 பேர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!!

லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து வேலை ஆட்களை ஏற்றுக் கொண்டு காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் மாம்பாக்கம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே இருக்கும் மின் கம்பத்தில் மோதி பெங்களூர் நோக்கி வேகமாக சென்ற லாரி மீதும் மோதியது.

இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்கம் பலமாக சேதமடைந்தது. மேலும் லாரி கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த 10 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

Categories

Tech |