லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள பெட்டவாய்த்தலை தேவஸ்தானம் பகுதியில் ரஞ்சித்குமார்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரஞ்சித்குமார் முசிறியில் இருக்கும் தாய் மாமா வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து ரஞ்சித்குமார் மீண்டும் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி ஓட்டுநர் சைகை காண்பிக்காமல் வாகனத்தை திருப்பியுள்ளார்.
இதனால் ரஞ்சித்குமாரின் மோட்டார் சைக்கிளில் லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரஞ்சித்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ரஞ்சித்குமார் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநரான தமிழ்ச்செல்வன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,