லாரியும், காரும் மோதிக் கொண்டதில் 6 குழந்தைகள் உள்பட 14 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள பிரதாப்கர் பகுதியில் மணிக்கப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் இன்று நள்ளிரவில் திடீரென்று லாரியும், காரும் பயங்கரமாக மோதிக் கொண்டதில் கார் அப்பளம் போல நொறுங்கியுள்ளது. இதில் 6 சிறிய குழந்தைகள் உட்பட பதின்நான்கு பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விபத்தில் பலியான 14 பேரின் குடும்பங்களுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.