Categories
மாநில செய்திகள்

லாரி வாடகை திடீர் உயர்வு எதிரொலி…. காய்கறிகள் விலையேற்றம்…? அதிர்ச்சியில் மக்கள்..!!

பெட்ரோல், டீசல்களின் விலை ஏற்றத்தின் காரணமாக லாரிகளின் வாடகை விலை உயர்ந்துள்ளதால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இது வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டுமில்லாமல் அத்தியாவசிய பொருள்களை எடுத்துச் செல்லும் லாரிகள் போன்றவற்றுக்கும் இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் பொதுக்குழு மற்றும் ஒருங்கிணைந்த மோட்டார் உரிமையாளர் தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை மாதவரத்தில் நடைபெற்றது. லாரிகளுக்கு தற்போது உள்ள வாடகையில் இருந்து 30% உயர்த்தி வசூலிப்பது என அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரவேண்டும். பழைய வாகனங்களை 15 ஆண்டுகள் என்பதை 20 ஆண்டுகளாக உயர்த்த வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த வாடகை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக காய்கறி மளிகை பொருட்கள் உள்ளிட்ட மக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சமையல் சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்தால் ஏழை எளிய மக்கள் எவ்வாறு பயன் பெறுவார்கள் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

Categories

Tech |