Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அப்பளம் போல் நொறுங்கிய ஹெல்மெட்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

சேலம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள நாச்சினம்பட்டி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் சூரமங்கலம் பகுதியில் பொக்லைன் எந்திரம் கம்பெனியில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கணேசன் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சூரமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது சேலத்திலிருந்து தீவட்டிப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக கணேசன் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் லாரியின் சக்கரம் ஏறி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கணேசன் இறந்து விட்டார்.  அவர் அணிந்திருந்த ஹெல்மெட் அப்பளம் போல் நொறுங்கியது. இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |