Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

லாரி விபத்து… 50 ஆயிரம் முட்டைகள் உடைந்து நாசம்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர், கிளீனர்…!!

சென்னிமலை அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர், கிளீனர் அதிஸ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூர் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநரான சங்கர்(38) என்பவரும்  கிளீனராக ஜெயராம் (27) ஆகியோர் ஒரு லட்சம் கோழி முட்டைகளை ஏற்றிக்கொண்டு அனந்தபூர் பகுதியிலிருந்து கோவை மாவட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். கோவையில்  உள்ள தனியார் நிறுவனத்தில் இன்குபேட்டர் மூலம் கோழி குஞ்சு பொரிப்பதற்காக இந்த முட்டைகளை அட்டை பெட்டிகளில் அடுக்கி வைத்து கொண்டு சென்றனர்.

அப்போது நேற்று காலை 6 மணியளவில் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருந்து காங்கேயம் செல்லும் சாலையில் கணுவாய் என்ற இடத்தில் வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக லாரி நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஓட்டுநர் சங்கரும், கிளீனர் ஜெயராமனும்  லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். மேலும் இந்த விபத்தில் அட்டைப்பெட்டியில்  வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் முட்டைகள் உடைந்து நாசமாகியது.

பின் வேறு லாரி வரவழைக்கப்பட்டு அதில் உடையாத முட்டைகள்  ஏற்றி செல்லப்பட்டது. இது தொடர்பாக சென்னிமலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த இடத்தில் விபத்து நடக்காமல் இருக்க எச்சரிக்கை பலகை வைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |