Categories
கிரிக்கெட் விளையாட்டு

லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி 3-வது வெற்றி…. உற்சாக கொண்டாட்டம்…..!!!

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. 1986, 2014-ம் ஆண்டுக்கு பிறகு புகழ்பெற்ற இங்கிலாந்தின் லாட்ஸ் மைதானத்தில் இந்தியாவிற்கு ஒரு வரலாற்று டெஸ்ட் வெற்றி கிடைத்திருக்கிறது. லாட்ஸ் வெற்றியின் மூலம் கபில்தேவ், தோனி வரிசையில் கோலியும் புதிய வரலாறு படைத்திருக்கிறார்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் மூன்று போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 1986 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்திலும், அதன்பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு 2014 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்திலும், தற்போது விராட் கோலி தலைமையில் 151 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள்.

Categories

Tech |