Categories
அரசியல்

“லாலிபாப் கொடுத்து ஏமாற்றுகிறார்கள்.”…. பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்து சத்தீஸ்கர் மாநில முதல்வர் பேட்டி….!!

மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்து இருப்பது குறித்து சத்தீஸ்கர் முதல் மந்திரி பேட்டி அளித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரவல் காரணமாக பல நாடுகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வெகுவாக குறைந்து. இதனால் பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலையும் குறைந்தது. ஆனால் இந்தியாவை பொருத்தமட்டில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திக் கொண்டே சென்றதால் பெட்ரோல் டீசல் விலையில் எந்த இறக்கமும் ஏற்படவில்லை.

மாறாக நாளுக்கு நாள் பெட்ரோல்-டீசல் விலை ஏறிக்கொண்டே சென்றது. மேலும் இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய போது பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வாய்ப்பு இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்திருந்தது. மேலும் இது குறித்து பேசுகையில் அமைச்சர் ஒருவர் தடுப்பூசிக்கான பணம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மூலமாகவும் பெறப்படுகிறது என பேட்டி ஒன்றில் கூறி இருந்து கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.மேலும் இந்தியா முழுவதும் பல இடங்களில் மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல் முடிவுகளில் தோல்வி காரணமாக மத்திய அரசு தற்போது பெட்ரோல் டீசல் விலையை குறைத்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன.

ஆனால் மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்திய போதும் ஒரு சில மாநிலங்களில் வாட் வரி கொடுக்கப்பட்டதால் கர்நாடகா போன்ற சில மாநிலங்களில் மட்டும் பெட்ரோல் டீசல் விலை சற்றே குறைவாக இருந்து வந்தது. இந்நிலையில் சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் இதுகுறித்துக் கூறுகையில், மத்திய அரசு கலால் வரியை 30 லிருந்து 9 ரூபாயாக குறைத்தால் பெட்ரோல் டீசல் விலை கட்டாயம் குறையும் எனவும் ஆனால் மத்திய அரசு பெட்ரோல் விலையை 30 ரூபாய்க்கு மேல் ஏற்றிவிட்டு வெறும் 5 ரூபாய் குறைப்பது அழும் குழந்தைக்கு லாலிபாப் கொடுத்து ஏமாற்றுவது போல் உள்ளதாக கூறியுள்ளார்.

Categories

Tech |