Categories
தேசிய செய்திகள்

“லாலுவின் பாஸ்போர்ட் புதுப்பிப்பு மனு”…. நீதிமன்றம் போட்ட உத்தரவு…..!!!!!

ராஷ்ட்ரீய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத்தின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சி.பி.ஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

பிகார் மாநிலத்தில் கால்நடைத் தீவனஊழல் குறித்த டொரண்டா கருவூல மோசடி வழக்கில் சிறைத்தண்டனை பெற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், தன் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும் என ராஞ்சியிலுள்ள சிபிஐ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு சிங்கப்பூர் போக வேண்டும் எனவும் அதற்காக சி.பி.ஐ வசமுள்ள தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்கத் அனுமதிக்க வேண்டும் எனவும் கோரி இருந்தார். இந்த மனு சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த நிலையில் லாலுவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க நீதிமன்றம் அனுமதியளித்து நாளையே பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளது. இதற்கென லாலுவின் பாஸ்போர்ட்டை அவரிடம் ஒப்படைக்க சிபிஐக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இதற்கு சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது. கருவூல மோசடி 5-வது வழக்கில் டொரண்டா கருவூலத்தில் ரூபாய் 139 கோடி முறைகேடு செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், லாலு பிரசாதுக்கு 5 வருடங்கள் சிறைத் தண்டனையும், ரூபாய் 60 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சென்ற பிப்ரவரி 21ஆம் தேதி தீா்ப்பளித்தது. இவ்வழக்கில் லாலு பிரசாத் யாதவ் சென்ற ஏப்ரல் மாதம் ஜாமின் பெற்றுள்ளார்.

Categories

Tech |